ஊத்தங்கரை அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதிரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சித்ரா(24) இதே பகுதியை சேர்ந்தவர் சென்னகேசவன்(46) இந்த நிலையில் நேற்று முன்தினம் தேதி அன்று ஊர் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சித்ரா வீட்டிற்கு அவருடைய நண்பரான பிரவீன்குமார் என்பவர் வந்துள்ளார். கோவில் அருகே நின்றுக்கொண்டிருந்த அவரிடம் மதுபோதையில் வந்த சென்னகேசவன் தன் மகளை எதற்காக போட்டோ எடுத்தாய் எனக்கூறி பிரவீன்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தடுக்க வந்த சித்ராவையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லாவி போலீசில் சித்ரா புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்து சென்னகேசவனை கைது செய்தனர்.
Next Story

