கரூர்-செங்குந்தபுரத்தில் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.

கரூர்-செங்குந்தபுரத்தில் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.
கரூர்-செங்குந்தபுரத்தில் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் 7-வது கிராஸ் பாண்டியன் மெஸ் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அறிவழகனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூலை 4-ம் தேதி மதியம் 2 மணி அளவில் செங்குந்தபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கரூர் காமராஜ் மார்க்கெட் பின்புறம் வசித்து வரும் சிக்கந்தர் மகன் ராஜா வயது 20 என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து , அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ராஜாவை கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story