கோவை: தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானை !

கோவை: தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானை !
X
உணவு தேடி விவசாயத் தோட்டங்களில் புகுந்து சேதம் விளைவித்து வரும் ஒற்றை காட்டு யானையின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில், உணவு தேடி விவசாயத் தோட்டங்களில் புகுந்து சேதம் விளைவித்து வரும் ஒற்றை காட்டு யானையின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொம்மனம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ரவியின் தோட்டத்தில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு யானை சுற்றித் திரிந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை வளர்ச்சி, வறட்சி ஆகிய காரணங்களால், வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்கள், தீவனங்கள், உணவுப் பொருட்களுக்கு சேதம் விளைவிக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், யானை மனித வாழ்க்கைக்கும் ஆபத்தாக மாறும் முன், வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, யானையை வனத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
Next Story