கோவை: நீங்கள்தான் மட்டும் தான் வாக்கிங் போவீங்களா —வாக்கிங் ஏரியாவுக்கு வந்த பாம்பு !

X
கோவை மையப்பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும் காலையும் மாலையும் நூற்றுக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சிக்காக வருகை தருவர். இந்தப் பகுதியில் நேற்று சுமார் 5 அடி நீளமுள்ள பச்சை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. நடைப்பயிற்சிக்கு போன்ற வந்தவர்கள் சிலர் பாம்பை கவனித்ததோடு மட்டும் நிற்காமல், அந்தப் பாம்பை யாரும் மிதிக்காமல், இருசக்கர வாகனத்தில் நசுக்காமல், அது யாரையும் கடிக்காமல் பாதுகாப்பாக சாலை ஓரமாக கொண்டு சென்று விட்டனர். இதனால் பாம்பின் உயிர் காக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், மனிதர்களின் மனிதநேயத்தை எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல உதாரணமாக அமைந்தது.
Next Story

