கோவை: சாலை சேதம் – குடிநீர் குழாய் உடைப்பு !

கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாக சேதம் ஏற்பட்ட நிலையில், தற்போது குடிநீர் குழாய் உடைந்து சாலையில் நீர் பெருகி ஓடுகிறது.
கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாக சேதம் ஏற்பட்ட நிலையில், தற்போது குடிநீர் குழாய் உடைந்து சாலையில் நீர் பெருகி ஓடுகிறது. இதனால் சாலை ஆறுபோல் காட்சியளிக்க, வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த சாலையில் நிலவும் சீர்கேட்டால் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து சாலை மற்றும் குழாய் பழுதுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story