ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

X
துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாயவன் மகன் அழகேசன் (30). திருமணமாகாத இவா் திருச்சி பொன்மலை குட்ஷெட் யாா்டில் பணியாற்றி வந்தாா். கடந்த சில மாதங்களாக மனஅழுத்தத்தில் இருந்த இவா், அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை மாலை அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து அங்கு வந்த துவாக்குடி போலீஸாா் அழகேசனின் சடலத்தை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

