பரிதிமாற் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்.

மதுரை விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலைய நீட்டு மரியாதை செலுத்தினார்.
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம், மேற்கு வட்டம், விளாச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு இன்று (ஜூலை.6) காலை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தளபதி எம்எல்ஏ முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், வேலுச்சாமி திமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story