அரகண்டநல்லூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்த்த முன்னாள் அமைச்சர்

X

திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவிற்கு ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கும் பணியினை முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி துவக்கி வைத்தார். அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உள்ள பல்வேறு வீதிகளில் நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். உடன் அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அன்பு, திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன், முன்னாள் துணைத் தலைவர் குணா, திருக்கோவிலூர் நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story