பெண்ணிடம் அத்துமீறிய பர்னிச்சர் கடை அதிபர் கைது!

பெண்ணிடம் அத்துமீறிய பர்னிச்சர் கடை அதிபர் கைது!
X
கோவில்பட்டியில் வீடுபுகுந்து பெண்ணிடம் அத்துமீறி கொலை மிரட்டல் விடுத்த பர்னிச்சர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டியில் வீடுபுகுந்து பெண்ணிடம் அத்துமீறி கொலை மிரட்டல் விடுத்த பர்னிச்சர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் ராஜையா மகன் சந்திரசேகர் (54). இவர் கோவில்பட்டி கடலையூர் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சிந்தாமணி நகரில் உள்ள இவரது வீட்டிற்கு அருகே, இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த வீட்டில் கணவனை இழந்த 42 வயதுள்ள பெண் தனது 2 குழந்தைகளுடன் வாடகைக்கு இருந்து வருகிறார். நேற்று மதியம் அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட சந்திரசேகர், வீட்டுக்குள் நுழைந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டபடியே வெளியே ஓடி வந்ததுள்ளார். இதை தொடர்ந்து அந்தப் பெண்ணை அவர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தபெண் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்திரசேகரை கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story