ஆம்பூர் அருகே காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்,

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதியில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் கடந்த சில மாத காலமாக சரிவர குடிநீர் வழங்கவில்லையெனவும், இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கேட்டால், ஊராட்சி மன்ற தலைவர் முறையாக பதில் அளிப்பதில்லையெனக்கூறி அப்பகுதி மக்கள் இன்று உமராபாத் - உதயேந்திரம் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர், அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் சாலை மறியிலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
Next Story

