வாணியம்பாடி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை..

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து அனுமதியின்றி செம்மண் ஏற்றி விற்பனை செய்வதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் மற்றும் வருவாய்த் துறையினர் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டதில். அங்கு முரம்பு மண் மற்றும் செம்மண் ஆகியவற்றை ஜேசிபி இந்திரம் மூலமாக டிப்பர் லாரிகளில் ஏற்றி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கலந்திரா பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் அஜித், பூவரசன், மோகன், திருப்பதி ஆகிய நான்கு பேர் தப்பி ஓடி உள்ளனர் இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Next Story

