காளிகாம்பாள் கோவிலில் மங்களசண்டி ஹோமம்

X
காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், உலக நன்மைக்காகவும், சாபம், பித்ரு தோஷம் நீங்கவும், மன உளைச்சல் அகன்று, ஆரோக்கியமாக வாழ்க்கை வேண்டி வாராஹி நவராத்திரியையொட்டி, மூன்று நாட்கள் நடைபெறும் மங்கள சண்டி ஹோமம் துவங்கியது. பிற்பகல் 12:30 மணி வரை நடந்த ஹோமத்திற்கான ஏற்பாட்டை அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் மங்கள சண்டி ஹோமம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
Next Story

