பரமத்தி வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.

பரமத்தி வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.
X
பரமத்தி வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர்.
.பரமத்தி வேலூர்,ஜூலை.6: பரமத்தி வேலூர்-கரூர் செல்லும் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் திருட்டுத்தனமாக மறைத்து வைத்து கொண்டுவிற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட செல்லாண்டி அம்மன் கோவில் பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் தீபன் (25). என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள மொத்த லாட்டரி சீட்டு விற்பனை ஏஜெண்ட்டிடம் லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்ததாக தெரிவித்தார். பின்னர் பரமத்தி குற்றியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள கிளை சிறையில்  அடைக்கப்பட்டார்.
Next Story