மாடுகளால் போக்குவரத்து இடையூறு, விபத்து அபாயம்

X
Komarapalayam King 24x7 |6 July 2025 5:35 PM ISTகுமாரபாளையத்தில் மாடுகளால் போக்குவரத்து இடையூறு,விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம் நகரில் உள்ள பல சாலைகளில் பல மாடுகள் விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டுகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். காலை வேளையில் நடை பயிற்சிக்கு செல்லும் பொதுமக்களும் அஞ்சியவாறு சென்று வருகின்றனர். சேலம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. விபத்து சம்பவங்களும் மாடுகளால் நடந்து வருவதால், மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
