கோவை: சூலூர் அருகே கார் விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

X
கோவை, சூலூர் அருகே செலகரச்சல் பகுதியில், பல்லடம்–செட்டிபாளையம் சாலையில் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. அப்பநாயக்கன்பட்டி புதூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் பயணித்த கார், எதிர்பாராதவிதமாக தடம்புரண்டதில் கார் தலைகீழாக கவிழ்ந்தது. அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். எந்தவித காயமும் ஏற்படாதது ஆறுதலாகும். விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையின் பராமரிப்பு குறைபாடுகள், எச்சரிக்கை பலகைகளின் பற்றாக்குறை உள்ளிட்டவை அடிக்கடி விபத்துகளுக்குக் காரணமாக உள்ளன என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story

