ஓசூர் கல்யாண காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை.

X

ஓசூர் கல்யாண காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரில் ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கோவிலில் குழந்தைகளின் ஆயுள் விருத்திக்காகவும், அவர்கள் நலமுடன் வாழவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பண்டிதர்கள் மந்திரம் ஓத ஆயுஷ் ஹோமம் நடத்தப்பட்டது. ஏகாம்பர ஈஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு குழந்தைகள், சிறுவர்கள் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பால், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்த னர். இதில், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story