சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் 

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் 
X
ஆட்சித்தலைவர்
தஞ்சாவூர் மாவட்டத்தில், "சாதிபாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து, தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய “சமூக நல்லிணக்க ஊராட்சி விருது" வழங்கப்பட உள்ளது.  மேற்கண்ட பரிசுத் தொகை அரசு வழிமுறைகளில் தெரிவித்துள்ள உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்க தரவுகளின் அடிப்படையில் இந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும். மேற்கண்ட விவரப்படி சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,  முதல்தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை அணுகி, விண்ணப்ப படிவத்தினை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, அதற்கான அனைத்து ஆவணங்களுடன் ஜூலை- 10ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் இவ்வலுவலத்தில் கிடைக்குமாறு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story