இளைஞர் அஜித்குமார் மரணம். முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கூறிய முன்னாள் ஆட்சியர் உ.சகாயம்.

இளைஞர் அஜித்குமார் மரணம். முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கூறிய முன்னாள் ஆட்சியர் உ.சகாயம்.
X
கீழடியில் இருந்து கிடைக்கும் செல்வத்தை பாதுகாக்க வேண்டும். மாற்றான் தாய் மனப்பாங்குடன் தமிழர்களின் வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.நாமக்கல்லில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் பேட்டி அளித்தார்.
நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் எழுதிய கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் கலந்து கொண்டு அந்த நூலை வெளியிட்டு பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து முன்னாள் ஆட்சியர் உ.சகாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்... திருப்புவனத்தில் அஜித்குமார் மரணம் என்பது அதிகார அத்துமீறல், கண்டனத்துக்குறியது ஆகும் காவல் கஸ்டடி மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இளைஞர் அஜித்குமார் மரணம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இதில் தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டு விடும் என்பதை புரிந்து கொண்டு முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார் மேலும் நாட்டிலேயே மூத்த மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்கவேண்டுமே தவிர பாரபட்சம் பார்க்க கூடாது. நாங்கள் தேர்தலை தாண்டி சிந்தித்து வருகின்றோம். விழிப்புணர்வு உள்ள சமூக மாற்றம் வரவேண்டும், அவ்வாறு இருந்தால் மாற்றமுள்ள அரசியலை தீர்மானிக்கலாம் தெரிவித்தார், தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கற்பனையான கேள்விக்கு பதில் சொல்ல உகதந்தது இல்லை எனபேசிய அவர் பொதுச்சொத்துகளில் இருந்து எடுத்து கொண்டவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர், வாக்குக்கு பணம் கொடுத்து தேர்தலை சந்திப்பது நல்லது இல்லை. தேர்தலை தாண்டிய விழிப்புணர்வு கூடிய பெரும் தமிழக மக்களை நோக்கி பயணிக்கின்றோம், கீழடியில் இருந்து கிடைக்கும் செல்வத்தை அரசு பாதுகாக்க வேண்டும், மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடந்து கொண்டு தமிழர்களின் வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழர்கள் ஏற்கனவே விழிப்புணர்வுடன் இருப்பவர்கள் என பேட்டி அளித்தார்
Next Story