உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த வாகனம் வீட்டின் மீது விழுந்து விபத்து...

காரில் பயணித்த ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக
உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த வாகனம் வீட்டின் மீது விழுந்து விபத்து... காரில் பயணித்த ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்... நீலகிரி மாவட்டம் உதகைக்கு கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஐந்து பேர் நண்பர்கள் 4 சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் சாலையோரத்தில் உள்ள வீட்டின் மீது கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த ஐந்து பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறு காயங்கள் அடைந்தவர்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து டி3 காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வீட்டின் மீது வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகுவது வாடிக்கையாகவே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story