குன்னூர் மேட்டுபாளையம் மலைரெயில் பாதையில் ஒற்றைக் கொம்பன் காட்டியானை பயணிகளை மிரட்டியதால் பரபரப்பு! வீடியோ வைரல்

குன்னூர் மேட்டுபாளையம் மலைரெயில் பாதையில் ஒற்றைக் கொம்பன் காட்டியானை பயணிகளை மிரட்டியதால் பரபரப்பு! வீடியோ வைரல்
X
வீடியோ வைரல்
குன்னூர் மேட்டுபாளையம் மலைரெயில் பாதையில் ஒற்றைக் கொம்பன் காட்டியானை பயணிகளை மிரட்டியதால் பரபரப்பு! வீடியோ வைரல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா முக்கியப்பகுதியாக விளங்கும் குன்னூர் மேட்டுபாளையம் மலைரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் ஒரு ஒற்றைக் கொம்பன் காட்டியானை, சுற்றுலாப் பயணிகளை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் தற்போது பசுமை திரும்பி உள்ளது இதனால் யானைகளுக்கு தேவையான உணவு போதுமான அளவு இங்கு உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து யானைக் கூட்டங்கள் குன்னூருக்கு படையெடுத்துள்ளது இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் ஒற்றைக்கொம்பன் காட்டு யானை அவ்வப்போது மலை ரயில் வந்து செல்லும் போது தண்டவாளத்தில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இருந்தபோதிலும் தண்டவாளத்தில் இருந்து யானை கடந்து செல்லும் வரை ரயில் ஓட்டுநர்கள் நிறுத்தி கவனமாக இயக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது இதுமட்டும்இல்லாமல் தற்போது 13 யானைகள் கூட்டமாக பர்லியார் வனப்பகுதிக்கு வந்துள்ளது குறிப்பிட தக்கது சிறிது நேரம் மலைரெயில் நடமாடிய யானை பின்னர் காட்டுக்குள் திரும்பியது. அதன்பின் மலைரெயில் போக்குவரத்து வழக்கத்திற்கு திரும்பியது. இது போன்ற ஒற்றை யானைகள் பொதுமக்கள் பகுதிக்கு நுழைவது தற்போது பெரிதும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, வனப்பகுதிக்கு அருகிலுள்ள மலைவழி வழித்தடமாக கொண்ட சுற்றுலா பாதைகள், விலங்குகள் இயல்பாக நுழையும் வழிகள் என்பதாலும், இவை போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. வனத்துறை எச்சரிக்கை: வனப்பகுதிக்கு அருகிலுள்ள சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள், குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அதிக கவனத்துடன் பயணிக்க வேண்டும். விலங்குகளின் இயற்கை பாதைகளை மாற்ற முடியாது என்பதால், மனிதர்கள் தான் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். சுற்றுலாப் பயணிகளின் அச்சம் கலந்த அனுபவம் “யானை எங்களை நோக்கி சில வினாடிகள் முன்னேறிய போது நிச்சயம் உயிருக்கு ஆபத்து போலவே இருந்தது. இது போன்ற இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும்” என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி.வருகிறது
Next Story