சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!
X
100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் மாட்டு வண்டிகளை நிறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி 4 வது மண்டலத்திற்கு உட்பட்ட 31 வது வார்டு முள்ளிப்பாளையம், கே.கே. நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழைய பெங்களூர் சாலையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் மாட்டு வண்டிகளை நிறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story