குட்கா விற்பனை செய்த நபர் கைது!

X
வேலூர் மாவட்டம் அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் வீரரெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக 64 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குட்கா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (44) என்பவரை கைது செய்தனர்.
Next Story

