தடை செய்யப்பட்ட பொருள் விற்ற ரெண்டு பேருக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட பொருள் விற்ற ரெண்டு பேருக்கு அபராதம்
X
குட்கா விற்ற 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்
ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கவும், கண்காணிக்கவும் தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வரப்படுகிறது.அந்த வகையில், ஈரோடு மரப்பாலம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில், உணவுப்பாதுகாப்புத்துறை, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அதில், அதேப்பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர்கள் மாணிக்கவாசு, பாபு ஆகியோருக்கு சொந்தமான மளிகை கடையில் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Next Story