சமூக வலைதளங்களில் பிரபலமான வாலிபர்

X

பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் நடுரோட்டிலேயே ஸ்கூட்டரில் சென்ற நபர் சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
ஈரோடு சத்திரோடு நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலையில் நடுரோட்டில் ஸ்ட்டரை ஒருவர் ஓட்டிச்சென்றார். அப்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்ற அவர், விளையாட்டுத்தனமாக நடுரோட்டில் இடைவெளிவிட்டு வரையப்பட்ட எல்லைக்கோட்டில் இடது, வலது புறமாக மாறி மாறி ஓட்டி சென்றார். இதை அவருக்கு பின்னால் காரில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது. போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தை உணராமலும் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story