இலத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் உருவப்பட திறப்பு விழா நிகழ்ச்சி.

இலத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் உருவப்பட திறப்பு விழா நிகழ்ச்சி.
X
இலத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் உருவப்பட திறப்பு விழா நிகழ்ச்சி.
இலத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே எஸ் ராமச்சந்திரன் அவர்களின் உருவப்பட திறப்பு விழா நிகழ்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் ,இலத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான K.S. ராமச்சந்திரன் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது திருவுருவா படம் திறப்பு விழா நிகழ்ச்சி கே.எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களின் மகனும் இலத்தூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளருமான கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், பனையூர் மு.பாபு, மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். கே.எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்கள் லத்தூர் ஒன்றிய செயலாளர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு, பால் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவராகவும், 2006, 2021 இலத்தூர் ஒன்றிய பெருந்தலைவராகவும், மூன்று முறை ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் என பல்வேறு பதவிகளில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story