மது போதை வாலிபருக்கு தர்ம அடி

X
ஈரோடு அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணிடம் மதுபோதையில் வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 4 நள்ளிரவு 1 மணியளவில் 20 வயது மதிக்கதக்க திருமணம் ஆகாத இளம்பெண் கழிவறை நோக்கி சென்றுள்ளார். அவரை மதுபோதையில் பின் தொடர்ந்த ஈரோடு பழைய பூந்துறை சாலையை சேர்ந்த ரியாஸ் (28), என்ற வாலிபர் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.இதை அறிந்த நோயாளிகள் உறவினர்கள் ரியாசை பிடித்தனர்.இளம்பெண்ணின் தாய், ரியாசை அடித்து உதைத்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.விசாரணையில், ரியாஸ் ஈரோடு மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக பணியாற்றுவது தெரியவந்தது. இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மனு ரசீது மட்டும் அளித்துள்ளனர்.இளம்பெண் நள்ளிரவு வந்ததன் காரணம் என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதுபோல் நள்ளிரவு நேரத்தில் மதுபோதையில் வாலிபர் அரசு மருத்துவமனையில் சுற்றி திரிந்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதுதவிர தனியார் செக்யூரிட்டிகளும் பணியில் உள்ளனர். இவை அனைத்தையும் மீறி இளம்பெண்ணிடம் வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டது பல்வேறு சந்தேகங்களை, கேள்விகளை எழுப்பி உள்ளது.
Next Story

