மாநகராட்சி பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு

X

மாநகராட்சியில் ஆணையர் ஆய்வுதிட்டப்பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்
ஈரோடு மாநகராட்சி 7வது வார்டில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை, ஆணையர் அர்பித் ஜெயின் ஆய்வு மேற்கொண்டார்.ஈரோடு ஆர்.என்.புதூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவத்தில், ஆணையர் அர்பித் ஜெயின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின், உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், உணவகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு வழங்க வேண்டும் என ஊழியர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, ஆர்.என்.புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர், செவிலியர்கள், ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகளின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். மேலும், மருந்து இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.இதேபோன்று, சூரியம்பாளையம் பகுதியில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையம், செங்குந்தபுரம் நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், பி.பெ. அக்ரஹாரத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, வ.உ.சி. பூங்காவில் உள்ள கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் லாரி உள்ளிட்டவைகள் குறித்து ஆணையர் அர்பித் ஜெயின் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, துணை ஆணையர் தனலட்சுமி, நகர திட்டமிடுநர் செந்தில் பாஸ்கர், தலைமை பொறியாளர் முருகேசன், செயற்பொறியாளர் பிச்சமுத்து, பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் ஸ்வரன்சிங் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story