ஆபத்தான நிலையில் மின்கம்பம் மாற்றக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள்

ஆபத்தான நிலையில் மின்கம்பம் மாற்றக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள்
X
பொதுமக்கள் கால்நடைகள் அதிகமாக உலாவரும் பகுதியில் இது போன்ற மின் கம்பத்தினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருமக்கள் வேண்டுகோள்
பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் தேரோடும் தென்வடல் வீதிக்கு தெற்கே சாலையின் தென் பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்திலும் , செங்குணம் புது கருப்பு சுவாமி கோவில் நுழைவு வாயில் தென்பகுதி சாலையோர ஒரு மின் கம்பத்திலும் அருகே பூமியில் நடப்பட்ட சாய்தள கம்பி வழியாக செடி கொடிகள் வளர்ந்து படர்ந்து பரவி வருகிறது. பசுமை நிறைந்த செடி கொடிகள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டது. இதனால் சாலையொட்டிய இந்த மின்கம்பமங்கள் அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று வருபவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பயத்துடனே பயணிக்கின்றனர். எனவே ஏதேனும் மின் ஆபத்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story