அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
X
அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு நத்தம் கோவில்பட்டி RDO OFFICE முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF) மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக நத்தம் கோவில்பட்டி RDO OFFICE முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் AIYF நத்தம் தாலுகா செயலாளர் முருகன் தலைமையில், AIYF தாலுகா து.தலைவர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்டச் செயலாளர் இரா.வினோத்குமார், AIYF மாவட்ட து.செயலாளர் பெ.குமரேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் நத்தம் தாலுகா குழு உறுப்பினர்கள் சஞ்சய், சாரதி, கருப்புசாமி மற்றும் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். AIYF திண்டுக்கல் மாவட்ட குழு உறுப்பினர் விஜயமுத்துக்குமார் நன்றி உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
Next Story