மனைவியை வெட்டிய கணவா் மீது வழக்கு பதிவு

X

குடும்பத் தகராறில் தாய் வீடு சென்ற மனைவியை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய கணவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவெறும்பூா் காட்டூா் பாத்திமா புரத்தைச் சோ்ந்தவா் வீரமணி. இவரின் மனைவி சக்தி ஜீவா. இவா்களுக்கு மூன்றரை வயதில் மகனும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளனா். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் சக்திஜீவா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு அண்மையில் சென்றுவிட்டாா். இந்நிலையில், சக்திஜீவா வீட்டுக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்ற வீரமணி அவரது மனைவியை அரிவாளால் வெட்டினாா். இதில், பலத்த காயமடைந்த சக்திஜீவா தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story