ராமநாதபுரம் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்புநிலையம்

ராமநாதபுரம் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்புநிலையம்
X
கமுதி பேரூராட்சியில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட ஊர்க்காவலன் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 2015}16ஆம் நிதியாண்டில் எதிர்மறை சவ்வூடு பரவல் திட்டத்தின் கீழ் தலா ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இவை தொடங்கப்பட்டு 8 மாதங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அரசு பணம் ரூ.12 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது. கமுதி பேரூராட்சி அதிகாரிகள் தலையிட்டு செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story