ராமநாதபுரம் ஓரணியில் தமிழ்நாடுபுதிய வாக்காளர் சேர்க்கை

ராமநாதபுரம் ஓரணியில் தமிழ்நாடுபுதிய வாக்காளர் சேர்க்கை
X
ஓரணியில் தமிழ்நாடு முதுகுளத்தூர் தொகுதியில் புதிய வாக்காளர் சேர்க்கை மேற்கொண்ட வனத்துறை அமைச்சர்
தமிழக முதல்வர் 2 கோடி புதிய வாக்காளர்களை கட்சியில் ஓரணியில் தமிழ்நாடு செயலி வழியாக இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக ஒன்றிய, நகர மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் ஏஜென்ட்கள் ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம்களை நடத்தி ஏராளமானவர்களை திமுக கட்சியில் சேர்த்து வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட உடைகுளம், வென்னீர்வாய்க்கால், பேரையூர் உள்ளிட்ட கிராமங்களில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை மற்றும் கதர்வாரிய துறை அமைச்சருமான R.S.ராஜகண்ணப்பன் ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் திமுகவில் சேர்ந்த வாக்காளர்களை நேரடியாக சந்தித்தார். எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றிலிருந்து தமிழ்நாடு மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமா டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் முதலமைச்சர் தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியினை வழங்கிட அனுபவமிக்க திரு மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்களா அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும் தங்கள் குடும்பமும் 'ஓரணியில் தமிழ்நாடு' என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா? எனக்கேட்டு அவர்களின் அனுமதி பெற்று அவர்களிடம் கையொப்பம் வாங்கி அவர்களின் வீட்டில் ஓரணியில் தமிழகம் என்ற ஸ்டிக்கர் அமைச்சர் அவர்களால் ஒட்டப்பட்டது இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் தொகுதி ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டு திமுகவின் புதிய செல்போன் செயலி மூலம் கட்சியில் இணைக்கும் பணியை மேற் கொண்டனர்.
Next Story