மது போதையில் முதியவர் சாவு

மது போதையில் முதியவர் சாவு
X
சிவகிரி அருகே பரிதாபம் மது போதையில் திராவகத்தை குடித்த முதியவர் சாவு போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டம், சிவகிரி அடுத்துள்ள காகம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (60). விவசாய கூலி வேலை செய்து வந்தார்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.  இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை அளவுக்கு அதிகமான போதையில் தானாக பேசிக்கொண்டு வந்த வேலுசாமி தனக்கு கை கால் வலிப்பதாகவும் அதனால் மருத்துவமனைக்கு போகலாம் என அவரது மனைவியை கூப்பிட்டுள்ளார். ஆனால், அவர் போதையில் உளறுவதாக நினைத்து யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் இரவு சுமார் 11.30 மணி அளவில் வேலுசாமி, வீட்டில் கழிப்பறை கழுவ வைத்திருந்த திராவகம் (ஆசிட்) குடித்து விட்டார். இதனால் வலியால் துடித்த வேலுச்சாமியை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக வேலுச்சாமியை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை  பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே வேலுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story