வெள்ளிச்சந்தை: விஷம் குடித்து பெண் தற்கொலை

 வெள்ளிச்சந்தை: விஷம் குடித்து பெண் தற்கொலை
X
கடன் தொல்லை
குமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே உள்ள சரல் பகுதியை சேர்ந்தவர் மாசானமுத்து மனைவி சசிகலா (49). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.  சசிகலா மகன் மணிகண்டன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த பல மாதங்களாக சசிகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் தொல்லை இருந்ததாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிகலா விஷம் குடித்துள்ளார். பின்னர் தகவலை மகனுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக மணிகண்டன் வீட்டுக்கு வந்து தாயாரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும்  பலனின்றி நேற்று சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story