மது கடத்தியவர் கைது

X
ஈரோடு மாவட்டம், ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனைச் சாவடியில் ந வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து சோதனையிட்டதில் அவர், கர்நாடக மாநில மது பாட்டில்கள் 5 கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம், குன்னூர், முட்டிநாடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27) என்பது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர் கடத்தி வந்த 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story

