வடமாநில வாலிபர் கைது

வடமாநில வாலிபர் கைது
X
கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் உட்பட  இருவர் கைது
ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஈரோடு மரப்பாலம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலம், சுபமபூர் கொட்ச மலை பகுதியைச் சேர்ந்த தீபராஜ் தாபா (22) என்பதும், தற்போது ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. அவரை சோதனையிட்டதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  மேலும் அவர் வைத்திருந்த ரூ.900 மதிப்பிலான 90 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதே போல பங்களாபுதூர் போலீசார் கணக்கம்பாளையம், பூஞ்சோலைப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த பழங்குற்றவாளியான ரவி (எ) குண்டு ரவி (49) என்பவரை சோதனை செய்த போது அவரிடம் ரூ. 400 மதிப்பிலான 40 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story