யானையின் வீடியோ வைரல்

X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை தற்போது பச்சை பசேல் என செழித்து காணப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் பல அபூர்வ மூலிகை மரங்களும் உள்ளன. பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான பலாப்பழம் மரங்கள் உள்ளன. தற்போதைய சீசன் என்பதால் பலாப்பழம் அதிக அளவில் காய்ச்சி கொண்டிருக்கிறது. இதன் வாசனையை மோப்பம் பிடித்து யானைகள் கூட்டமாகவோ, ஒற்றை யானையாகவோ வந்து பலாப்பழங்களை சாப்பிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில் நேற்று அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று பர்கூர் மலை வழியாக வந்து அங்கு சாலையோரம் இருந்த ஒரு பலாப்பழ மரத்தை பார்த்து தனது இரண்டு காலால் மரத்தின் மேலே வைத்து லாபகரமாக தனது துதி கையால் பலாப்பழத்தை பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டை ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. பெரும்பாலும் ஒற்றை யானையாகவே அவை வருகின்றன. தற்போது பர்கூர் மலைப்பகுதியில் பச்சை பசேல் என செழித்து காணப்படுவதால் யானைகள் உணவு தண்ணீர் தேடி பர்கூர் மலைப்பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. தற்போது சீசன் என்பதால் பலாப்பழங்கள் அதிக அளவில் காய்ச்சி உள்ளது. இதன் வாசனையை மோப்பம் பிடித்து யானைகள் வந்து பலாப்பழத்தை சாப்பிட்டு செல்கிறது. இவ்வாறு வரும் யானையை வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் கிராம மக்கள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. சிலர் ஆர்வம் மிகுதியால் யானை அருகே சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். இது பெரும் ஆபத்தில் முடிவடையும். இவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Next Story

