பள்ளி மாணவி மீது பைக் மோதல் - படுகாயம்

பள்ளி மாணவி மீது பைக் மோதல் - படுகாயம்
X
புதுக்கடை
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர்  பத்மா மகள் ரெஜிஸ்மா (13). இவர் கீழ் குளம் அரசு உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவ தினம் பள்ளிக்கூடம் செல்வதற்காக பஸ்சில் இருந்து பள்ளி அருகில் இறங்கினார். பின்னர் பள்ளி நோக்கி தேங்கா பட்டணம் - கருங்கல் சாலையில் நடந்து செல்லும்போது, வேகமாக வந்த பைக் ஒன்று மாணவியை மோதி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மாணவியை காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் பைக் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story