வழிப்பறி வழக்கில் ஒருவர் கைது

X
அரகண்டநல்லுார் அருகில் 2 நாட்களுக்கு முன்பு, பைக்கில் சென்ற ஜெகன் என்பவரை வழி மறித்து ரூ. 50 ஆயிரம் வழிப்பறி செய்த, கீழக்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யு மகன் பிரவீன், 27; யானஸ்ட் குருசாமி மகன் தமிழரசன், 26; சரவணன், 27; ஆகியோர் மீது அரகண்டநல்லுார் போலீசார் வழிப்பறி வழக்கு பதிந்து, பிரவீனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.மருத்துவ பரிசோதனைக்காக திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்துச் சென்றபோது, போலீஸ் பிடியிலிருந்து பிரவீன் தப்பி சென்றார். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த மற்றொரு நபரான தமிழரசனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் பிடியிலிருந்து தப்பி சென்ற பிரவீனை பிடிக்க சென்னை மற்றும் பெங்களூருக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
Next Story

