சோளிங்கர்: மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய எம்.எல்.ஏ

X
சோளிங்கர் பகுதியில் உள்ள தகரக்குப்பத்தை சேர்ந்த சந்தியா, மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த கிஷோர், சோளிங்கர் பகுதியை சேர்ந்த சரிகா, ரக்சா, லட்சுமி, ராஜேஷ் ஆகிய 6 கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி சோளிங்கர் தொகுதி முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அதன்பேரில் அவர் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருக்கும் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
Next Story

