மனைவி மாயம் . கணவர் புகார்

X
மதுரை மாவட்டம் பாலமேடு முருகையா நகரில் வசிக்கும் பிச்சை ராஜன் என்பவரின் மனைவி காமாட்சி (25) இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு. காமாட்சி வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த பிச்சை ராஜன் மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி மீண்டும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது கணவர் பாலமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story

