கோவை: நாட்டார் இசைக்கருவிகள் கண்காட்சி !

X
கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் ஆண்டு நாட்டார் இசைக்கருவிகள் கண்காட்சியில், தமிழரின் பாரம்பரிய இசைக் கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், துடும்பாட்டம் உள்ளிட்ட நாட்டார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துடும்பாட்டத்திற்கு ஏற்ப கலைஞர்கள் சிலம்பம், ஒயில்லாட்டம் போன்ற பாடலோடு நடனங்களை ஆடினர். குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மேலும், நிமிர்வு கலையகம் சார்பில் பறை, துடும்பு, செண்டை மேளம் உள்ளிட்ட கலை வகுப்புகள் மற்றும் சிலம்பம், அடிமுறை போன்ற பாரம்பரிய பயிற்சிகள் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
Next Story

