வாழ்நாயக்கன்பட்டியில்பாரம்பரிய இசை கருவிகள்
வாழ்நாயக்கன்பட்டியில்பாரம்பரிய இசை கருவிகள் & விளையாட்டுகளுடன் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுகா ,காருடையாம்பாளையம் ஊராட்சி வாழ்நாயக்கன்பட்டியில் விநாயகாதி பரிவார சகித வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சமேத நெடுங்கூர் ஸ்ரீ மதுரைவீர சுவாமி ஆலயம் புரைமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலை வேள்வியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு கோவிலின் சார்பாக உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
Next Story





