நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
X
நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், எடையாளர் நியமனம் செய்ய வேண்டும் என நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ் லாட்ஜ் எதிரில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், எடையாளர்களை நியமனம் செய்ய வேண்டும், எடை தராசும் நியாயவிலை கடைகளிலுள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் நியாயவிலை கடை ஊழியர்கள் தற்போது நடைமுறைபடுத்தியுள்ளதை எடை முறையை மாற்ற வேண்டும். பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதை உடனடியாக கலைக்க வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கோபிநாதன், பக்தவச்சலம், சபரிநாதன், முத்துகுமார், சேகர், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story