புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர்

மதுரை மேலூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை காணொளி காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார்
மதுரை மாவட்டம் மேலூரில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கட்டிடத்தை இன்று (ஜூலை.7) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி கட்டிடத்தை பார்வையிட்டார். உடன் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மேலூர் தாசில்தார் செந்தாமரை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லயனல் ராஜ்குமார், மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ஜோதி லெட்சுமண காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story