ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் முட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சம்பவத்தால் பரபரப்பு.

ஆட்சியர் அலுவலகத்தில்  நூதன முறையில் முட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சம்பவத்தால் பரபரப்பு.
X
ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் முட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சம்பவத்தால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் சுமார் 40 வருடங்களாக குடியிருக்கும் தங்களுடைய இடத்திற்கு பட்டா வழங்கவில்லை என்றால் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் ஓட்டர் ஐடி ஆகியவற்றை அரசிடமே ஒப்படைப்போம் என கூறி முழங்கால் பணியிட்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் நூதன முறையில் முட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு.
பொதுமக்கள் வட்டாட்சியரிடம் எப்படியாவது எங்க இடத்தை வாங்கி கொடுத்துடுங்க என கூறி காலில் விழுந்து எஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்கள் மனதை உலுக்கியது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தெக்கப்பட்டு கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பொதுமக்கள் சுமார் மூன்று தலைமுறைகளாக வீட்டிற்கு வரி செலுத்தியும் மின் கட்டணம் செலுத்தியும் முறையாக வாழ்ந்து வரும் நிலையில் சுமார் 40 வருடங்களாக தாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் காதில் வாங்கிக் கொள்ளாமல் அலைகழிப்பதாகவும் அதே பகுதியில் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து காலம் சென்ற வஜ்ரம் பிள்ளை என்பவர் இவர்களுடைய இடங்களை அவர்களுக்கே தெரியாமல் தன்னுடைய பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டதாலும் அவ்வப்போது தங்கள் குடியிருப்பு வீடுகளை வந்து இடித்து விடுவோம் என்று அவருடைய பிள்ளைகளான முரளி பிள்ளை உள்ளிட்டோர் மிரட்டி வீடுகளை இடிப்பதாலும் நாங்கள் மிகவும் அச்சத்துடனே வாழ்கிறோம் என்று கூறி போலி பத்திரம் தயார் செய்து தங்களை மிரட்டும் நவர்களுடைய பட்டாவை ரத்து செய்துவிட்டு காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முழங்கால் பணியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி தங்களுக்கு பட்டா வழங்கவில்லை என்றால் தங்களுடைய அடிப்படை உரிமைகளான ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஓட்டர் ஐடி ஆகியவற்றை அரசிடமே சமர்ப்பித்து விடுவோம் என்றும் கோரிக்கை வைத்தனர் மேலும் இதே போன்று தங்களை அலை கழித்தால் குடும்பத்தோடு வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர் மேலும் வட்டாட்சியரிடம் எப்படியாவது எங்கள் இடத்தை வாங்கி கொடுத்துடுங்க எனக் கூறி காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்கள் மனதை உலுக்கியது இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறும் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story