சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் மாரியப்பன் (வயது 44). விவசாயி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் மாரியப்பன் காலில் கடித்தது. பாம்பு கடித்து விட்டதை பார்த்த மாரியப்பன் உடனடியாக வீட்டிற்கு வந்து தனக்கு பாம்பு கடித்துவிட்டதாக கூறியுள்ளார். உடனே அவரது உறவினர்கள் மாரியப்பன் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story

