பள்ளப்பட்டி- எஸ் டி பி ஐ கட்சியினர் போலீஸ் தடையை மீறி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். '
பள்ளப்பட்டி எஸ் டி பி ஐ கட்சியினர் போலீஸ் தடையை மீறி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். ' கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் பல நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு, கடந்து சில தினங்களுக்கு ஒரே தெருவில் 8 நபர்களை நாய்கள் கடித்து விவகாரம் , கழிவுநீர் வடிகால் முறையாக சுத்தப்படுத்தாததை கண்டித்து எஸ்டிபிஜ கட்சி சார்பில் இன்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்பொழுது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாரை மீறி அலுவலக வளாகத்திற்கு நுழைந்த 50க்கும் மேற்பட்டோர் நகராட்சியை கண்டித்து முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் பள்ளப்பட்டி நகராட்சி பகுதிக்குள் முழுவதும் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் பொது மக்களை அச்சுறுத்து வகையிலும் உள்ள நாய்களை கட்டுப்படுத்த கோரியும் முறையான கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்த வேண்டியும் முழக்கம் எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story




