தக்கலை : வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

X
குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று (07.07.2025) தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து ரூ.30.76 இலட்சம் மதிப்பில் தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது என கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

