பாமக மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழா

X
Pallipalayam King 24x7 |7 July 2025 6:40 PM ISTபாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புதிய அலுவலகம் பள்ளிபாளையத்தில் திறக்கப்பட்டது
நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் ஒட்டமெத்தை என்ற பகுதியில் நடைபெற்றது . இந்த நிகழ்விற்கு மேற்கு மாவட்ட செயலாளர் உமா சங்கர் தலைமை தாங்கினார் .மாவட்டத் தலைவர் எம்.முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். எம்.பழனியப்பன் , ஆர்.சி.முருகேசன், கராத்தே என் சேகர், சரோஜா, செந்தில்நாதன் ஆலாம்பாளையம் முருகன், , ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த கரூர் மாவட்ட செயலாளரும், தெற்கு மேற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் PMK பாஸ்கரன் கலந்துகொண்டார். முன்னதாக அவருக்கு கட்சியினர் சார்பில் மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டு ஆராத்தி எடுக்கப்பட்டு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் கட்சி தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் . மேலும் இந்த நிகழ்வில் குமாரபாளையம் நகர செயலாளர் செல்லமுத்து, ராஜா நகர தலைவர் ராஜா, ஒன்றிய தலைவர் குமார்,சோமசுந்தரம் ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் ஆலாம்பாளையம் பேரரூர் ரவிக்குமார், செயலாளர் அமிர்தலிங்கம், சீனிவாசன், காடச்சநல்லூர் கார்த்திகேயன் ஆலாம்பாளையம் நாகராஜ் , மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.கே.முருகன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் , வழக்கறிஞர் மகாலிங்கம், பள்ளிபாளையம் நகர செயலாளர் ராஜா என்கின்ற ராஜசேகர் , நகர தலைவர் மெக்கானிக் ராஜா ,காளிதாஸ், நாராயணன் வேலுச்சாமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்
Next Story
